Monday, April 14, 2008

மீண்டும் சூரியன்!

இலங்கையிலிருந்து துணிச்சலுடன் ஒலித்துவந்த தமிழ்க் குரலான சூரியன்fm வானொலி அரசாங்கத்தின் கொடுர கரங்களால் இறுக்கி நசுக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் சூரியன் வானலைகளில் உலாவர ஆரம்பித்திருக்கிறது. நேயர்கள் அனைவர் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம்.

12 comments:

Anonymous said...

சூரியன்fm க்கு எனது வாழ்த்துக்கள்.
-Niroshi, Aus.

Anonymous said...

சூரியன்fm சிறப்பாக செயற்பட இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Denmark Pirashath

Anonymous said...

Hi. Best wishes to Sooriyanfm. Achchuthan, Canada.

Anonymous said...

சூரியன்fm இல் முன்னைய அறியிவிப்பாளர்கள் இல்லாதது வானொலியின் தரத்தை குறைத்துவிட்டது. அபர்ணாவுக்கு பிறகு லோசன் அருமையாக வளிநடத்திப்போனார். அவரும் இல்லை. கிருஸ்னா, சங்கீதா, விமலன், பிரதீபன் இன்னும் பலர் விலகிவிட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். செய்திப் பிரிவுத் தலைவர் நடராஜா குருபரனும் விலகிவிட்டாராம். சூரியனுக்கு மறுபடி அனுமதி கிடைத்ததில் அரசியல் தலையீடு அதிகமென்றும் இப்போது அரச தரப்புக்கு வானொலி விலைபோய்விட்டதென்றும் விசயம் தெரிந்த பத்திரிகை நண்பர் ஒருவர் சொன்னார். கொழும்பிலிருக்கும் எனது நண்பியும் தொலைபேசியில் கதைக்கும்போது அப்படித்தான் சொன்னார். செய்திகளை கேட்கும்போது அது புரிகிறது. ம். என்ன செய்வது? தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த சூரியன் இப்போது சிங்கள அரசின் ஊது குழலாய் மாறி நாறிப்போகிறது.

கவலையுடன்
நிரோ.
சுவிஸ்.

Anonymous said...

Sooriyan is the best.
I wish you all Success.
Sivaananthan kannan Newyork .

Anonymous said...

சூரியனில் லோசன் குருபரன் இல்லையென்றாலும் வியாசாவும் ரமணனும் முகுந்தனும் மறுபடி வந்திருக்கிறார்கள். அனுபவசாலிகளும் இளம் அறிவிப்பாளர்களும் நிச்சயம் நன்றாக நடத்துவார்கள். J.S.Antoney
Korea.

Anonymous said...

Sooriyan fm ஐ internetல் கேட்டேன். புதிய அறிவிப்பாளர்களின் தமிழ் உச்சரிப்பு மிக மிக மோசம். ள், ல், ழ் எல்லாத்தையும் ஒரேமாதிரித்தான் சொல்லுகிறார்கள். கேட்கவே சங்கடமா இருக்கு. இது ஒரு உதாரணம்தான். வடிவா ஒருக்கா கேட்டுப் பாருங்கோ. ஒருத்தர் தமிழை இங்கிலிஸ் ஸ்டைலில கதைக்கிறார். இன்னுமொருத்தர் சைனா மொழியில கதைக்கிறமாதிரிக் கதைக்கிறார்.
கடவுள்தான் இவையிற்றயிருந்து நேயர்களைக் காப்பாத்தவேணும்.
K.Nadeshakumar, Denmark.

Anonymous said...

சூரியனில் லோசன் குருபரன் இல்லை.
ரமணன் காலை வேளைகளில் மற்றும் நவனீதன் மாலைகளில் உளறுவதைக் காது கொடுத்துக் கேட்க சகிக்கவில்லை.பழைய தரம் தனித்துவம் எதுவுமே இல்லை.

நாங்கள் இப்போது வெற்றி கஅக்கு மாறி விட்டோம்.

அங்கே தான் இப்போது லோசன் பிரதீப் விமல் ஆகியோர் கலக்குகிறார்கள்.

Prathaban - wattala

Anonymous said...

சூரியனில் இப்போதுள்ள அறிவிப்பாளர்களில் ரமணனின் குரலைத் தவிர யாருடைய குரலும் கேட்கும்படியாக இல்லை. நவநிதன் பெண்களோடு கதைத்து கதைத்து பெண்குரலின் சாயலில்தான் பேசுகிறார். புதியவர்கள் எல்லாருமே style காட்டுகிறோம் என்று சொல்லி கேவலமாக சூரியனை சிதைக்கிறார்கள். நடராஜ சிவம் அண்ணாவும் அபர்ணா அண்ணாவும் ஆரம்பித்த வானொலியில் இன்று வெற்றுவேட்டுக்கள் அசிங்கம் பண்ணுகின்றன. Sivarahaj, Monrial, Canada

Anonymous said...

என்ன நடக்கிறது இலங்கையிலே? நம்ப முடியவில்லை.ஆனால் ஆரோக்கியமான விடயத்தை வெற்றி FM ஆரம்பித்துள்ளது. தொடரட்டும். ஆனால் மற்றவர்கள் செய்வார்களா?

Velaudham Karuna - Berlin

Anonymous said...

Wednesday, August 20, 2008
சூரியன் FM "லாஸ்ட்ல பர்ஸ்டு"
சூரியன் FM நெ.1 FM ஆன்னு சர்வே எடுத்ததுக்கு மக்கள் இல்ல "லாஸ்ட்ல பர்ஸ்டுன்னு சொல்லிட்டாங்க . இதோ உங்க் ரிப்போர்டு..

வந்து ஓட்டு போட்டவங்க :4275 பேர்
நெ.1ன்னு சொன்னவங்க :12 பேர்
நெ.2ன்னு சொன்னவங்க :864 பேர்
நெ.3ன்னு சொன்னவங்க :2110 பேர்
மவுசு போயிடுச்சு : 1249 பேர்

ஸோ... சூரியன் FM "லாஸ்டுல பர்ஸ்டாயிடுச்சு" இன்னமும் நாங்க தான் நெ.1ன்னு சொல்லாம நிஜமாவே நெ.1 ஆக டிரை பண்ணுங்க..

My friend sent this to me. is this true?

Ananth - mount lavinia

Anonymous said...

சூரியன் எப்.எம். அறிவிப்பாளர் ஒருவரின் கசமுசா சமாச்சாரம் பெரிய விவகாரமாகியிருக்கிறது. பெண் நேயர் ஒருவரை கர்ப்பமாக்கியுள்ள ஆண் அறிவிப்பாளர் பற்றிய தகவல் என்னிடம் உள்ளது. அனுப்பினால் போடுவீர்களா? Ananthraj, Wattala